தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய மாநாடு

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழநி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவான தொழிலாளர் தேசிய முன்னணி யின் தேசிய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டனில் (22/10) நடைபெற்ற நிர்வாகிகள் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளரும் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ்,

தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமாகும். 1990 களில் இருந்து 2000 ஆம் ஆண்டு வரை அதே பெயரில் அரசியல் கட்சியாகவும் செயற்பட்டுவந்தது. 1999 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் “இந்திய வம்சாவளி மக்கள் பேரணி” எனும் பெயரில் மலையகத்தில் உருவான கூட்டணி தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றன. அதில் இ. தொ. கா வும் அடக்கம். அதன் தொடர்ச்சியாக இ.தொ காவில் இருந்து வெளியேறியது போன்று நாடகமாடி நயவஞ்சகமாக கட்சிக்குள் புகுந்த சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவை சூழ்ச்சி செய்து சூறையாடி சென்றனர்.

அதன் பின்னர் 2007 ம் ஆண்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை பதவியை பொறுப்பேற்ற பழநி திகாம்பரம் தலைமையில் உருவாக்கப்பட்டதே தொழிலாளர் தேசிய முன்னணியாகும். 2009 முதல் தேர்தல்கள் திணைக்களத்தின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பித்திருந்த நிலையில், கட்சியின் அரசியல் செயற்பாடுகளை அவதானித்த திணைக்களம் 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய முன்னணியை இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக ஏற்றுக்கொண்டு அரிவாள் சின்னத்தையும் வழங்கியள்ளது.

2019 ஒக்டோபர் மாதம் நாத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட வருடாந்த மாநாடு ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புகள் காரணமாக தாமதமடைந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் 4 ம் திகதி நடாத்துவதற்கு நிர்வாகிகள் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பேராளர்கள் தாம் போட்டியிட விரும்பும் பதவிகளுக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் எனவும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435