தொழில் அதிகாரிகள் உள்வாங்கலில் அமைச்சரின் முறையற்ற தலையீடு

பொதுச் சேவை ஆணைக்குழு அனுமதியளித்து எண்ணிக்கையை விடவும் அதிக எண்ணிக்கையான தொழில் அதிகாரிகளை தொழிற் திணைக்களத்தில் அமைச்சரின் தலையீட்டினூடாக இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கடந்த வருடம் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைவாக 4 பரீட்சைகள் நடத்தப்பட்டதாகவும் அதற்கமைய வடக்கு கிழக்கு பிரதேசத்தில் மட்டப்படுத்தப்பட்ட, திறந்த போட்டிப்பரீட்சையினூடாக 25 அதிகாரிகளும் தென் மாகாணத்தில் மட்டுப்படுத்தப்பட்ட, திறந்த போட்டிப்பரீட்சையினூடாக 89 பேரும் இணைத்துக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக பொது சேவை தொழிலாளர் அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த பரீட்சையில் அதிக பெறுபேறுகளை பெற்ற 88 பேர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். புள்ளியடிப்படையில் 89 புள்ளிகளை பெற்ற 15 வரை உள்ளனர் என்றும் அமைச்சரவை அங்கீகாரத்துடன் மேலதிகமாக இவர்களை இணைத்துக்கொள்வதற்கும் கோரப்பட்டுள்ளது. இந்த 15 பேரை உள்வாங்குவதிலேயே தற்போது பிரச்சினை எழும்பியுள்ளது

இணைப்புச் சட்ட விதிகளுக்கமைய, திறந்த போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையினூடாக 50 வீதமானவர்களும் திறந்த போட்டிப்பரீட்சையினூடாக 50 வீதமானவர்களும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும். எனினும் அமைச்சர் தன் சுய தீர்மானத்திற்கமைய, மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தோற்றியவர்கள் அதிக எண்ணிக்கையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் திறந்த போட்டிப்பரீட்சையில் தோற்றியவர்களும் அதே எண்ணிக்கையில் உள்வாங்கப்படவேண்டும். வட மாகாணத்தில் இணைத்துக்கொள்ளப்படும் மட்டுப்படுத்தப்பட்டவகையில் தோற்றியவர்களும் அதே எண்ணிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் என்று பொதுச் சேவை தொழில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ. சீ கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் முழுமையான செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படின் மேலதிகமாக 50 அதிகாரிகள் சேவையில் உள்வாங்கப்படுவார்கள். எனினும் பொதுச் சேவை ஆணைக்குழு 202 அதிகாரிகளை சேவையில் இணைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டவிரோத செயலுக்கு தொழில் ஆணையாளர் நாயகம் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை.

மேலதிகமாக உள்வாங்கப்படும் 15 பேரில் அமைச்சருக்கு நெருங்கியவர்களும் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளமையினால் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த வருடம் அமைச்சரினால் நியமிக்கப்பட்ட மடிஹஹேவா குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கமைய, தொழில் திணைக்களத்தில் உள்ள பதவியுயர்வு பெறாத 70 பட்டதாரிகள் தொழில் அதிகாரிகளாக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், மேற்கூறப்பட்ட வகையில் நியமனம் வழங்கப்படின் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்படமாட்டாது.

அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுக்கும் இணைப்பு சட்டவிதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமாயின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் பல்வேறு முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மென்மேலும் முறைக்கேடுகள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்விடயம் தொடர்பில் தாம் மிகவும் அவதானத்துடன் இருப்பதாகவும் தொழிற்சங்கத் தலைவர் எச்சரித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435