
தொழில் உலகத்தில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் பல்வேறு வகையிலான வன்முறைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது யாவரும் அறிந்த விடயமாகும். இத்தகைய சூழ்நிலையில் இருந்து அவHகளை பாதுகாக்கும் நோக்கமாக சா;வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற்றும் ஒரு சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து விஷேட தீர்மானத்திற்கான அனுமதியினை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியை தற்பொழுது மேற்கொண்டு வருகின்றது. அதனை முன்னிட்டு இந்த ஆண்டு ஜுன் மாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் 107வது
சம்மேளன அமர்வின் போது அது சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ் அமர்விற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளார்கள். அதன் பின் இந்த மாநாட்டிற்கான அனுமதியை சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அடுத்த அமர்விற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தொழில் புரியும் இடங்களில் இடம்பெறும் இவ்வாறான வன்முறைகள் அனைத்து மக்களின் கௌரவம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும்.
இலங்கையில் இச்சூழ்நிலை மிகவூம் பாரதூரமான அனுபவங்களை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பல்வேறு தொழில்களுக்குச் செல்லும் ஆண்களும், பெண்களும் தொழில் புரியும் இடங்களில் ஏனைய ஆண்களாலும், பெண்களாலும் உடல், உள மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறான நிலைமையில் அவர்களை பல இன்னல்களிருந்து பாதுகாப்பதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மேற்கொள்ளும் இம்முயற்சியானது பாராட்டத்தக்கது.
இம்முயற்சிக்கு நாம் எமது ஒத்துழைப்பை வழங்குவது காலத்தின் தேவையாகும். இந்த நடவடிக்கைக்கு எம்முடன் கைகோர்த்துக் கொள்ளுமாறு உலகத்தில் தொழில் புரியும் அனைத்து மக்களிடமும் மற்றும் நிறுவனங்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றோம். இது தொடர்பாக அரசு மற்றும் முதலாளிகள் எதிர்ப்புகளை தெரிவிப்பது அவசியமற்றதாகும்.
இன்னல்களற்ற வேலைத்தளத்தைப் பேணுதல் நிகழ்கால மனித சமூகத்தின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். அதனூடாக நேர்மையான தொழிற்சூழலுடன் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு உறுதிப்படுத்தப்படுகின்றது. சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இலங்கையைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழு தொழில் உலக மக்கள் இம்மாநாட்டிற்கு வழங்கும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில் தங்களின் பங்களிப்புடனான மனு ஒன்றினை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.