
உழைக்கும் மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய கட்டளைச் சட்டங்கள் நான்கையும் ஒன்றிணைத்து ஒரே தொழிலாளர் சேவை சட்டத்தை உருவாக்க தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
கடை மற்றும் அலுவலக ஊழியர் சட்டம், ஊதியங்கள் வாரியங்கள் கட்டளைகள் சட்டம், அடிப்படை உபகாரம் சட்டம் , மகளிர் இளைஞர் மற்றும் சிறுவர்களை பணிககு அமர்த்துதல் தொடர்பான கட்டளைச் சட்டம் முதலான சட்டங்களுக்காக ஒரே சட்டத்தை தயாரிக்கு பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீநதிர சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டங்களின் ஊடாக தொழிலாளர் வர்க்கத்தினர் அனுபவிக்கும் சிறப்புரிமைகள் மறறும் சேவை நிபந்தனைகள் என்பன ஒருபோதும் இல்லாது செய்யப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறான சட்டங்களுக்குப் பதிலாக, அனைத்தையும் ஒரே சட்டமாக்குவதனூடாக முதலீட்டாளர்களுக்கும், தொழில்தருநர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இலகுவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறித்த சட்டமூலம் தொடர்பான வரைவைத் தயாரித்து, அதனை தேசிய தொழிலாளர் ஆலோசனைக்கு குழுவில் முன்வைக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீநதிர சமரவீர தெரிவித்துள்ளார்.