பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் நேற்று (27) காலை ஆரம்பிக்கப்பட்ட நாடு தழுவிய வேலைநிறுத்தத்தினால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின.

ஏழு அம்ச கோரிக்கையை முன்வைத்து நேற்று காலை 8.00 மணிக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியல்கள் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியது.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பிரிவு, நூலகம், கணனிக்கூடம் என்பவற்றில் பணியாற்றிய கல்விசாரா ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டமையினால் முடங்கிபோயின.

ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைத் தலைவர் எட்வர்ட் மல்வத்தகே கருத்து தெரிவிக்கையில்:தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் வாக்குறுதி அளித்தபோதிலும் அவை இதுவரை நிறைவேற்றப்படாததால் தாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க நேரிட்டுள்ளது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அமைச்சர் எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தாங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடப்போவதில்லையென்றும் அவர் கூறினார்.

கல்விசாரா ஊழியர்களுக்கான பொது வைத்திய காப்புறுதி, ஓய்வூதியத் திட்டம், வேலை செய்யும் வயதெல்லையை 60 ஆக அதிகரித்தல், மாதாந்த கொடுப்பனவை அதிகரித்தல், மொழி திறன்களுக்கான கொடுப்பனவு, அடிப்படை சம்பளத்தில் 2500 ரூபாவை சேர்த்தல் உள்ளிட்ட 07 அம்ச கோரிக்கைகளை முன்னெடுத்தே இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435