பொதுவான வகையில் ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி உட்பட பல சேவைகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் (கொவிட் -19) கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தொழில் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் கீழ் கண்ட சேவைகள் 2020.03.31 ஆம் திகதி வரையில் இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1. ஊழியர் சேமலாப நிதி கணக்கில் இருந்து தமது அங்கத்துவ நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பொறுப்பேற்றல்.
2. ஊழியர் சேமலாப நிதியில் 30 சதவீத பயன்களைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பத்தை பொறுப்பேற்கும் பணி.
N3. ஊழியர் சேமலாப நிதியில் வீட்டு கடனுக்காக சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தை பொறுப்பேற்கும் பணி.
என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளன.