வெளிநாடு சென்ற 608 பேர் கடந்த வருடம் மரணம்

கடந்த வருடம் வேலைவாய்ப்பை நாடி சென்றவர்களில் 608 பேர் உயிரிழந்துள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 428 பேர் ஆண்கள் என்றும் 180 பேர் பெண்கள் ஆவர். இவற்றில் நூறு திடீர் மரணங்கள் எனவும் 367 நோய்வாய்ப்பட்டதால் ஏற்பட்ட மரணங்கள் என்றும் 9 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் 28 பேர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் 109 மரணங்கள் எதனால் ஏற்பட்டன என்று இன்னும் அடையாளங்காணப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு வெளிநாடு சென்று மரணமானவர்களின் உறவினர்களுக்கு 2015ஆம் ஆண்டில் நட்டஈடு மற்றும் இரத்த நட்டஈடாக 20 கோடியே 96 இலட்சத்து 91ஆயிரத்து 863 ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியானது 148 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆவணங்கள் மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளினூடாக வெளிவிவகார அமைச்சின் கொன்சியுலர் பிரிவு கடந்த வருடம் 12 கோடியே 47 லட்சம் 50 ஆயிரம் வருமானம் ஈட்டியுள்ளது.

ஆவணங்கள், பிறப்புச்சான்றிதல், திருமணச்சான்றிதழ், இறப்புச்சான்றிதழ், மருத்துவச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ், பொலிஸ் சான்றிதழ், சத்தியக்கடதாசி, அட்டோணி பத்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தியதனூடாக இவ்வருமானம் கிடைத்துள்ளது.

நாளாந்தம் சுமார் 600 பேர் இச்சேவையினைப் பெற்றுக்கொள்ள வருகின்றனர் என்றும் கடந்த வருடம் 2 இலட்சத்து 21ஆயிரம் ஆவணம் இவ்வாறு உறுதிப்படுத்துள்ளன என்று கடந்த ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435