தொழில் நுட்ப அதிகாரிகள் 140 பேர் சேவையில் இணைப்பு

புதிய தொழில்நுட்பவியல் அதிகாரிகள் 140 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (12) உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தலைமையில் கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

அமைச்சின் கீழுள்ள25 மாவட்டச் செயலகங்களில் கீழியங்கும் 14022 பிரதேச செயலகங்களினூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் போது நிலவும் தொழிநுட்பவியல் அதிகாரிகள் பற்றாக்குறையை நீக்கும் வகையிலேயே இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நியமனங்களாவன கைத்தொழிற்றுறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மத்திய அரசின் தொழில்நுட்பவியலாளர்களை பயிற்றுவிப்பதற்கு INSEE சீமேந்து நிறுவனத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சு புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றிலும் அமைச்சு இன்று (12) கைச்சாத்திட்டது.

இத்திட்டத்தின் ஊடாக நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள தொழில்நுட்ப அதிகாரிகள் பயிற்றுவிக்கப்படவுடன் அதற்காக INSEE சீமெந்து நிறுவனம் 5 மில்லியன் ரூபா நிதியை முதலீடு செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ், கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர, INSEE சீமெந்து நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நந்தன ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

dgi

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435