தோட்டச் சேவையாளர் சங்கத்தினர் போராட்டம்

பல கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை தோட்டச் சேவையாளர் சங்கத்தினர் இன்று (26) மஸ்கெலியா, மவுஸாகல சந்தியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

18 பெருந்தோட்டத்துறை கம்பனிகளுக்கும் தோட்ட சேவையாளர் சங்கத்துக்கும் இடையில் இம்மாதம் 6ம் திகதி கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய 25 வீத சம்பள அதிகரிப்புக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ரிச்சட் பீரிஸ் நிறுவனத்தின் கீழ் மஸ்கெலிய நமுனுகுல மற்றும் கேகாலை ஆகிய பெருந்தோட்ட கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களில் அதிகரிக்கப்பட்ட தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படாமல் கொடுப்பனவாக வழங்க இணங்கியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் நடத்தப்படுவதாகவும் அச்சங்கத்தின் அட்டன் பிரதேச உப தலைவர் செல்லத்துறை மனோகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தமது ஊழியர் சேமலாபநிதியம் உட்பட அனைத்து கொடுப்பனவுகளில் பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மஸ்கெலிய பெருந்தோட்டத்துறைக்கு சொந்தமான சுமார் 10 தோட்டங்களின் ஊழியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

எமக்கு அதிகரிக்கப்பட்ட 25 வீத சம்பள அதிகரிப்பை அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து வழங்குமாறு பொறுப்பதிகாரிகளுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டபோதிலும் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை. இம்மாதம் 29ம் திகதிக்குப் முன்னர் தீர்வு எட்டப்படாவிடின் எதிர்வரும் 5ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றும் மனோகரன் தெரிவித்துள்ளார்.

இப்போராட்டத்தில் மஸ்கெலிய பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான பிஹிட், ஸ்டென்ஸ்பீ, ப்ரன்ஸ்விக், மோக்கா, க்லனுஜி, லக்‌ஷ்பான, மரே, க்லென்ட்ல்ட், ஹப்புகஸ்தென்ன, பிரவுன்லோ மற்றும் டிசையிட் ஆகிய 10 தோட்டங்களின் சேவையாளர்கள் 200 பேர் வரை கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435