தோட்டத் தொழிலாளர் சம்பளம்600 ரூபாவாக உயர்கிறது!

தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை 600 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் (15) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவ்விணக்கம் காணப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம, நவீன் திஸாநாயக்க, ஜோன் செனவிரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் இதுவரை 450 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்விணக்கப்பாட்டையடுத்து கூட்டு ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை முதலாளிமார் சம்மேளனமும் தொழிற்சங்கங்களும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435