தோட்டத் தொழிலாளருக்கு பல்முறை சம்பள முறை யோசனை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்கு பல்முறை சம்பள முறையினை முதலாளிமார் சம்மேளம் முன்வைத்துள்ளது.

அம்முறைக்கமைய மாதத்தில 12 நாட்கள் வேலைக்கு வந்தால் வருகை சம்பளமாக 720 ரூபாவும் ஏனைய நாட்களுக்கு கொழுந்து எடைக்கமைய சம்பளம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வேறுநாடுகளில் வெற்றிரமாக முன்டெக்கப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டியுள்ள பெருந்தோட்ட கம்பனிகள் சங்க பேச்சாளார் இதனூடாக தொழிலாளர்கள் கூடிய சம்பளத்தை பெறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சம்பள முறைக்கமைய நாளொன்றுக்கு 620 ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய முறைக்கமைய 720 ரூபா சம்பளத்துடன் மேலதிகமாக கொழுந்து எடைக்கமைய 50 வீத சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து தெரிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவிருந்த நிலையில் பெருந்தோட்ட தொழிலாளரின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துமாறு கோரப்பட்டத்தையடுத்து இழுபறி நிலை காணப்பட்டது. இது தொடர்பில் நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையிலேயே முதலாளிமார் சம்மேளனம் பல்முறை சம்பள முறை யோசனையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435