தோட்டத் தொழிலாளருக்கு 2500 சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 சம்பள உயர்வை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தொழிலமைச்சர் டபிள்யூ.ஜே.எம்.செனவிரட்ண நேற்று (07) பாராளுமன்றில் தெரிவித்தார்.

அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொழில் அமைச்சு முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தினேஷ் குணவர்த்தன எம்.பி.யினால் 23 கீழ் இரண்டில் எழுப்பப்­பட்ட தோட்டத் தொழிலாளிகளின் ரூபா 2500 சம்பள உயர்வு தொடர்பில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜோன் செனவிரட்ண இவ்வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் தனது பதிலில் மேலும் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 சம்பள உயர்வை பெரும்பாலான கம்ப­னிகள் இதுவரையில் வழங்கவில்லை. இது தொடர்பில் பிர­தமரின் தலைமையிலான பொருளாதார அலுவல்கள் தொடர்பான முகாமைத்துவ குழுவிலும் கலந்துரையாடப்பட்டது. பெருந்தோட்டக் கம்பனிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.

தற்போது பெருந்தோட்டத் துறையின் தற்காலிக வீழ்ச்சியைத் தொடர்ந்து வங்கிகள் ஊடாக கம்பனிகளுக்கு கடன்களை வழங்கி ரூபா 2500 சம்­பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கான நலன்புரிகள் சுகாதார சேவைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி குறைபாடுகள் நீக்கப்படும்.

தொழில் நியாய சபைகளில் உறுப்பினர்களுக்கு தமது பிரதிநிதிகள் ஊடாக விடயங்களை முன்வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

வேலைத்தளம்/ வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435