தோட்டத் தொழிலாளருக்கான முதலாவது கிராமம் கையளிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட கிராமத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) திறந்து வைத்து காணி உறுதி பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

நுவரெலியா மாவட்டத்தின் ஊட்டுவில் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட150 வீடுகளே நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மலையக புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ப. திகாம்பரத்தின் ஆலோசனைக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீட்டுத்திட்டத்தில், லயன் வீடுகளுக்குப் பதிலாக தனித்தனியாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

தண்ணீர், மின்சாரம் என்பவற்றுடன் கூடிய இவ்வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் பசுமை பூமி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435