தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளம் தொடர்பில் புதிய வாக்குறுதி

தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் தைப்பொங்கலுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் இந்த அரசில் நிச்சயம் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் யாழ். நகரில் இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டு வருகின்ற கலாசார நிலையத்தை பார்வையிட்டார். இதன் போது தோட்டத்தொழிலாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் கால பிரசாரத்தின்போது இன்றைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அதில் எந்தவிதமான மாற்றங்களும் இல்லை. ஏனெனில் தான் சொன்னதை ஜனாதிபதி நிச்சயமாக செய்வார். ஆகையால் எதிர்வரும் தைப் பொங்கல் காலத்தில் ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். இது இந்த இடைக்கால அரசாங்கத்திலேயே பெற்றுக் கொடுக்கப்படும் – என்றார்.

மூலம் : தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435