தோட்டத் தொழிலாளர் பாதுகாப்புக்கு யார் உத்தரவாதம் தருவது?

உலகமே கொவிட் 19 தொற்றுக்கு அஞ்சி வீடுகளுக்குள் பாதுகாப்பாய் இருக்கும் போது தோட்டத் தொழிலாளர்கள் மட்டும் இன்று ஒழுங்காக பாதுகாப்பு வசதிகள் இன்றி தோட்டத் தொழில் ஈடுபட்டுள்ளமை நியாயமா என்று இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சௌந்தராஜன் சந்தரமதன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் ஏதும் செய்துகொடுக்கப்படவில்லை. பெருந்தோட்ட உரிமையாளர்கள், உயரதிகாரிகள் வீடுகளில் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் தோட்டத் தொழிலாளர்களும் எம்மை போன்ற தோட்ட சேவையாளர்களும் களத்தில் இருந்து பணியாற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளோம். தெற்கை சேர்ந்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஸ் பத்திரனவும் பெருந்தோட்ட உரிமையாளர்களில் ஒருவராக இருக்கலாம். அதனால்தான் மக்கள் குறித்து கவனம் செலுத்தாமல் பணிக்கு வரச் சொல்கிறார்.

தேயிலை கொழுந்துகளை பறித்து என்ன செய்வது? ஏற்றுமதி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இக்கொழுந்துகளை பறித்து என்ன செய்வது? தோட்டத் தொழிலாளர்கள் மிக நெருக்கமான வாழ்க்கை வாழ்ப்பவர்கள். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஏன் அவர்கள் நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுவது நல்ல விடயம்தான். அவர்களுக்கு வருமானம் அதிகமாகும். ஆனால் இந்த சூழ்நிலை அதற்கு உகந்ததா என்றே நினைத்துப் பார்க்க வேண்டும். நாட்டின் பிரதான வருமானப் பொருட்களாக இருந்த தேயிலை, தென்னை, றப்பர் போன்ற பெருந்தோட்டப்பயிர்கள் இன்றும் நாட்டுக்கு அவசியமானவை என்பது உணர்ந்துள்ளமை நல்ல விடயம்தான்

ஏற்கனவே ஹட்டன், டிக்கோயா பிரதேசத்தில் 200 குடும்பங்களை சேர்ந்த சுமார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலை குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435