தோட்ட அதிகாரிக்கு எதிராக கொலப்பத்தனை தொழிலாளர்கள்

அரச பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் (ஜனவசம) இயங்கும் நாவலப்பிட்டி கொலப்பத்தனை தோட்டத்தின் தோட்ட அதிகாரிக்கு எதிராக கொலப்பத்தனை, தலப்பத்தனை, கொங்காலை ஆகிய தோட்ட மக்கள் தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கொலப்பத்தனை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் 25.09.2019 அன்று காலை ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவரை குறித்த அதிகாரி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு. எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய சுலோகங்களை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த மக்கள் பயன்படுத்தும் குடிநீரை மேற்படி தோட்ட அதிகாரி பயன்படுத்த முயற்சி செய்த வேளையில் தோட்ட தலைவர் இது தொடர்பில் அதிகாரியிடம் கேட்டபொழுது அவர் தலைவரை தாக்கியதாக தெரிவித்தே குறித்த தோட்ட தொழிலாளர்கள் கடந்த 17 நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்ட வந்த நிலையில் 25.09.2019 அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகம் கொழுந்து இல்லாத காலத்திலும் 25 கிலோகிராம் தேயிலை கொழுந்து பறிக்கவேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் 25 கிலோவிற்கு குறைவாக பறித்தால் அரை நாள் சம்பளம் வழங்குவதாகவும் இதனால் தாம் வருமான ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை தோட்ட நிர்வாகம் தேயிலை செடிகளை முறையாக பாதுகாக்காமல் காடாக்கியுள்ளதாகவும் இத்தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். அத்தோடு, தேயிலை மலையினை முறையாக பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மலையக அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைபாடுகள் செய்தபோதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் ஆர்பாட்டகாரர்கள் தமக்கு தீர்வு கிடைக்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435