நடமாடும் தெய்வங்களாய் தாதியர்கள்!

இன்றைய உலகின் கதாநாயகர்கள். கொவிட்-19 கொடிய உயிர்கொல்லியிடமிருந்து உலகத்தையும் – உயிர்களையும் பாதுகாக்க தங்களின் உயிரையும் துச்சமெனக் கருதி போராடிக்கொண்டிருக்கும் நடமாடும் தெய்வங்களே தாதியர்கள். செவிலியர்கள் என்றும் அழைக்கப்படுகின்றார்கள்.

உலகமே அச்சத்தால் முடங்கிக் கிடைக்கும் நிலையில், உயிர்கொல்லியை எதிர்த்து இரவு-பகல் பாராமல் போராடும் தாதியர்களின் அளப்பரிய சேவையை இன்று இந்த உலகமே போற்றிப் புகழ்கின்றது. அவர்களின் சேவையின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் போதாது.

அப்படியான தாதியர்களை போற்றி அவர்களை கௌரவிக்கும் தினம் இன்றாகும். மே 12 உலக தாதியர் தினம். இந்த முறை 200ஆவது தாதியர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச ரீதியில் தற்சமயம்வரை கொவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 42 இலட்சத்து 69 ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 87 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், 15 இலட்சத்து 33 ஆயிரத்து 808 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சர்வதேச தகவலகள் தெரிவிக்கின்றன.

உலக பரவும் நோயாக வியாபித்துள்ள கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸை உலகத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்காகவும், பாதிக்கப்பட்ட நோயாளர்களை மீட்பதற்காகவும், உலகளவில் தாதியர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வையும், குடும்பத்தையும் முழுவதுமாக துறந்து, கொரோனா வைரஸிடமிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளில் இருந்தவாறே பெரும்பாலான தாதியர்கள் சேவைபுரிகின்றனர்.

இந்த நிலையில், “உலக ஆரோக்கியத்திற்கு தாதியர்கள்” “Nursing the World to Health” என்பதை 2020 ஆம் ஆண்டின் சர்வதேச தாதியர் தினத்திற்கான தொனிப்பொருளாக உல சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

உலகின் அனைத்து சுகாதார ஊழியர்களிலும் பாதிக்கும் மேற்பட்ட தாதியர்கள் உள்ளனர். இருப்பினும் உலகளவில் 5.9 மில்லியன் தாதியர்களின் தேவைப்பாடு இன்னும் உள்ளன. குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் தாதியர்களுக்கு அவசர பற்றாக்குறை நிலவுகிறது.

கொவிட்-19 தொற்றுநோய் தாதியர்கள் வகிக்கும் முக்கிய பங்கை முற்றிலும் நினைவூட்டுகிறது. தாதியர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்கள் இல்லாமல், இந்த தொற்று நோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற முடியாது. நிலையான அபிவிருத்தி இலக்குகளை அல்லது உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைய முடியாது.
இந்த நிலையில் தாதியர்களின் தேவை கருதி கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சில விடயங்கள்

· தாதியர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் என்பன மிகமுக்கியமாகும். குறிப்பாக, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கான தடையின்றி அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும். அதனால் அவர்கள் பாதுகாப்பாக பராமரிப்பை வழங்க முடியும் மற்றும் சுகாதார அமைப்புகளில் தொற்றுநோய்களைக் குறைக்க முடியும்.

·· தாதியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் மனநல உதவி, சரியான நேரத்தில் ஊதியம், நோய்வாய்ப்பட்ட விடுப்பு மற்றும் காப்பீடு ஆகியவற்றை அணுகுவதற்கான வாய்ப்புகள் கட்டாணமாக இருக்க வேண்டும்.

· அத்துடன், வைரஸ் தொற்று உட்பட அனைத்து சுகாதாரத் தேவைகளுக்கும் பதிலளிக்கத் தேவையான மிகவும் புதுப்பித்த அறிவு மற்றும் வழிகாட்டுதலுக்கான அணுகல்.

· கொவிட்-19 மற்றும் எதிர்கால தாக்கங்களுக்கு பதிலளிக்க மற்றும் கட்டுப்படுத்த உதவும் தாதியர்களுக்கு நிதி உதவி மற்றும் பிற வளங்கள் வழங்கப்படுகின்றன

· தாதியர்களை இந்த ஆண்டில், முன்னெப்போதையும் விட, அரசாங்கங்கள் ஆதரித்து செயற்படுவது மிகவும் அவசியமாகும்.

· கொவிட்-19 தாதியர் பணிகள், கல்வி, தலைமை ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான தேவையை வலுப்படுத்துகிறது.

· தங்கள் தாதிய பணியாளர்களை வளர்ப்பதன் மூலம், நாடுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரித்தல் ஆகியவற்றின் மூன்று தாக்கத்தை அடைய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

“அன்னைக்கு அடுத்தபடியாக அன்பாகவும் அரவணைப்பாகவும் அருவருப்பு இன்றியும் நம்மைப் பார்த்துக் கொள்ளும் இன்னோர் உயிர் – தாதி.”

இன்றைய மனித சமூகத்துக்கான தாதிமாரின் சேவையை இலகுவாக மதிப்பிட்டுவிட முடியாது. சாதாரண வைத்திய சேவைகளிலிருந்து போர் கால வைத்திய சேவைகள் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இவர்களது சேவைகள் வியாபித்துக் காணப்படுகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பையும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூற இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செவிலியர் தினம் உருவானது எப்படி?

´பிபிசி´யினால் விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் இனங்காட்டப்பட்ட பெண் “புளோரன்ஸ் நைட்டின்கேல்”. தாதித்தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ஒரு கிறிஸ்தவரான இவர் தனக்கு ´இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே´ தாதியர் சேவையை உணர்ந்து மேற்கொண்டார்.1837 ஆம் ஆண்டில் அவருக்கு ஏற்பட்ட இந்த உணர்வின் விளைவாக தன் வாழ்நாளையே தாதியர் சேவைக்காக அர்ப்பணித்தார்.

ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் – ஐக்கிய இராச்சிய மற்றும் ஒட்டோமான் பேரசுப்படைக் கூட்டணிக்குமிடையே 1854 – 1856ம் ஆண்டு நடந்த கிரிமியன் போரில் தனது மருத்துவப் பங்களிப்பின் மூலம் புளோரன்ஸ் நைட்டின்கேல் புகழ் பெற்றவரானார்.மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புக்கள் ((Notes on Hospitals)), அக்காலத்தில் தாதியர்களுக்கான மிகச் சிறந்த பாடநூலாகக் கருதப்பட்ட “தாதியர்பணி பற்றிய குறிப்புக்கள்” (Notes on Nursing), “உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள்” (Notes on Matters Affecting the Health),”பிரித்தானிய இராணுவத்தின் மருத்துவமனை நிர்வாகமும், செயல் திறனும்” (Notes on Matters Affecting the Health) என்பவை நைட்டின்கேல் எழுதிய புகழ் பெற்ற நூல்களுள் சில. போரிலிருந்து நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டின்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார்.

1820ல் மே மாதம் 12 ஆம் திகதிபிறந்த நைட்டின்கேல் தாதிமார் சேவையை நிறுவி அதை முன்னேற்றும் பணியிலேயே தனது வாழ்நாளை கழித்தவராவார். நவீன தாதியியல் முறையை வித்திட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக நினைவுகூருவதற்காகவும் செவிலியர்களை போற்றுவதற்காகவும் சர்வதேச செவிலியர் தினம் இந்நாளில் கொண்டாடப்படுகின்றது.

கல்வி முறை

ஒவ்வொரு நாட்டிலும் தாதியர் பாட நெறியின் பயிற்சி வருடங்கள் வேறுபட்டது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் கற்பிக்கப்படும் பாடநெறிகளுக்கான பரீட்சைகளில் சித்திபெற்றால் மட்டுமே அடுத்த வருட பாடநெறியை தொடர முடியும்.

எழுத்து மூல பரீட்சை செய்முறை பரீட்சை என இரண்டு வகையான பரீட்சைகள் உள்ளன. இதில் செய்முறை பரீட்சையில் சித்திபெற 60 மூ ற்கு அதிகமான புள்ளிகளை பெறவேண்டும்.

தாதியர் பணியில் 25 வகையான நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலைக்கும் வெவ்வேறு விதமான பட்டப்படிப்பு தகைமைகள் அவசியம். இதில் முனைவர் பட்டமே அதிஉயர் நிலை ஆகும். இதனை கற்பதற்கு முதலில் இள நிலை பட்டம் அதனை தொடர்ந்து முது நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு முனைவர் பட்டம் பெற்றவர்கள் ‘Doctor Nurse’என்ற நிலையை அடைகின்றனர்.

செவிலியர்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டிய சில விடயங்கள்.

உலகின் சுகாதார பணியாளர்களில் 50மூ செவிலியரும் மருத்துவ பணிப்பெண்களும் ஆவர்.

தற்போது உலக அளவில் அதன் எண்ணிக்கை குறைந்துவருகின்றது. தென் கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் செவிலியர் மற்றும் மருத்துவ பணிப்பெண் குறைபாடு உள்ளது.

சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோய்த் தடுப்பிலும் ஆரம்ப சுகாதர மற்றும் சமுதாய பராமரிப்பிலும், அவசர நிலை அமைப்பிலும் செவிலியர்கள் முக்கிய நிலை வகிக்கின்றனர்.

அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி பெறுபவதற்கு அவர்களே முக்கியமானவர்கள்.

https://www.who.int/news-room/detail/11-05-2020-happy-international-nurses-day

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435