நட்டஈடு வழங்க சுமார் நூறுமில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் விருப்பத்தின் பேரில் ஓய்வுபெற்ற சுமார் 100 ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக சுமார் நூறு மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்றுறை ம்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் கூட்டுத்தபானத்தில் பணிகளை மேற்கொள்ள உண்மையின் படி 415 ஊழியர்களே தேவையாக இருந்தனர். எனினும் 735 பேர் அவசியம் என்று கருதப்பட்டு ஊழியர் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர். எனினும் கடந்த ஆட்சிக் காலத்தில் மேலதிகமாக ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதில் ஊழியர்களின் எணிக்கை 1100 அதிகரித்தது. சம்பளம் வழங்குவது உட்பட பல நிர்வாக பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டன.

எனவே சம்பளம் வழங்குவதற்காக வாங்கப்பட்ட கடனை செலுத்துதல் உட்பட பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வழங்கப்படும் நட்டஈட்டை நிராகரிக்கும் முயற்சியில் தொழிற்சங்கம் பின்னால் இருந்து செயற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435