நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா? கம்பனிகளின் பிரதிநிதியா?

தோட்டத் தொழிலாளர் சம்பள விடயம் தொடர்பில் எந்தவொரு அரசாங்கத்திடமும் முறையான திட்டமில்லை. 50/- கொடுப்பனவு தொடர்பில் சபை முதல்வர் வழங்கியிருக்கும் பதிலும் பிரதமர் அமைச்சரவைக்கு வழங்கியிருக்கும் முன்மொழிவும் வேறானவையாக இருக்கின்றது. அதேபோல பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நவீன் திசாநாயக்க மக்கள் பிரதிநிதியா அல்லது கம்பனிகளின் பிரதிநிதியா எனவும் சந்தேகம் எழுகின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இன்றைய விவாதத்தில் கூட எதிர்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்தன விசித்திரமான வினா ஒன்றை எழுப்பியுள்ளார். அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியாவது தோட்டத் தொழிலாளர்களுக்கான 50/- கொடுப்பனவை வழங்குங்கள் என்பதாகும். அதற்கு பதிலளித்த சபை முதல்வர் தோட்டத் தொழிலாளர்களுக்கான 50/- கொடுப்பனவுக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால், அதற்காக பிரதமர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்ய 600 மில்லியனை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவே கூறப்பட்டுள்ளது.

உண்மையில் 50/- என்ற தொகைக்கு வெளியே இலங்கையின் முன்னணி ஏற்றுமதி கைத்தொழிலான பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள விவகாரம் அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதனை வலியுறுத்தவே நாம் அரசாங்கத்தை தலையிட செய்தோம். எனவே தற்போதைய முறைமையில் இருந்து பெருந்தோட்டத்துறை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு பொறுப்பான அமைச்சர் நவீன திசாநாயக்க மக்களின் பிரதிநிதியாக அல்லாது கம்பனிகளன் பிரதிநிதியாக செயற்பட்டு வருகிறார். எனவே இந்த துறை சிறுதோட்ட தொழிலாளர்களுக்கு மாற்றப்படல் வேண்டும். எதிர்வரும் தேர்தல்கள் எதுவாயினும் எமது பிரதான நிலைப்பாடு இதுவாகவே இருக்கும். அரசாங்கம் நேற்று (31/07) பாராளுமன்றத்தில் உறுதியளித்தவாறு தோட்டத் தொழிலாளர்களுக்கு 50/- கொடுப்பனவை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435