
தென் மாகாண ஆசிரியர் கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்கு 5000.00 ரூபா சீருடை ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் வை. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தெற்கு கல்வியமைச்சர் சந்திம ராசபுத்திரவின் ஆலோசனைக்கமைய இவ்வாறு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க்ப்படவுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் உள்ள சுமார் மூவாயிரும் பேருக்கு இக்கொடுப்பனவை வழங்குவதற்காக 150 மில்லியன் ரூபா வரையில் செலவாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாகாண அமைச்சரவையில் அமைச்சர் அனுமதி கோரியுள்ளார் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.