நஷ்டஈடு கோரும் அட்டாளைச்சேனை விவசாயிகள்

அட்டாளைச்சேனை கமநலப் பிரிவிலுள்ள குடாக்கரை கிழல் கண்டம், மேல் கண்டம் என்பனவற்றில் சுமார் 250 ஏக்கர் நெற்செய்கை அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றாக அழிவடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நெற்காணிகளுக்கு அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்தொகை பணச் செலவில் செய்கை பண்ணப்பட்ட ஒன்றரை மாத கால நெற்செய்கை நீண்ட நாட்கள் வெள்ளநீர் வடியாததால், முற்றாக அழிவடைந்ததாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த அழிவுக் காணியில் சுமார் 100 ஏக்கர் காணிகள் சிறுபோகம் மாத்திரம் செய்கை பண்ணுபவை. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் ஏழை விவசாயிகள் செய்கை பண்ணிய நெற்செய்கை இம்முறை எதுவித பலனுமளிக்காது அழிவடைந்து விட்டதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குடாக்கரை கிழல், மேல் கண்ட விவசாயிகளில் அதிகமானவர்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நெற்செய்கை அழிவடைந்ததனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும், எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

குறித்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட அழிவை சம்பந்தப்பட்டவர்கள் பார்வையிட்டு விவசாய அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு என்பனவற்றினூடாக நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோருகின்றனர்.

​வேலைத்தளம்/வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435