மத்திய கிழக்கில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 151 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
மத்திய கிழக்கில் இருந்து நாடுதிரும்பிய நிலையில், தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 151 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
வவுனியா – வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 151 பேரே இன்று வீடு திரும்பியுள்ளனர்.
டுபாய் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த கண்டி, மாத்தறை, நுவரெலியா, கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 151 பேர் வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்கியிருந்தனர்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பின்னர் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.