மினுவங்கொட , திவுலபிட்டிய கொவிட் 19 கொத்தணிகள் நாட்டில் மோசமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்று பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேலியகொட மீன்சந்தையில் ஆரம்பித்த உபகொத்தணி தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. சிலருக்கு எவ்வித அறிகுறியும் காட்டப்படாவிடினும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாநகரசபையின் கீழுள்ள சில பிரதேசங்கள் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார பிரிவினர் கட்டுப்பாட்டில் இருந்து நீங்கி வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.