நாடு திரும்பும் 3500 இலங்கையருக்கு விமான டிக்கட்கள்

சவுதி அரேபியாவினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்புக்காலத்தில் அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3500 இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான விமான டிக்கட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த பொது மன்னிப்புக்காலப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கியருக்கும் வெளிநாட்டவர் சொந்த நாடுகளுக்கு திரும்பாவிட்டால் அவர்கள் எவ்வித பாராபட்சமுமின்றி கைது செய்யப்படுவதுடன் இனி பொது மன்னிப்புக்காலம் எக்காரணத்தைக் கொண்டும் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சவுதியில் பணியாற்றுபவர்களை தௌிவுபடுத்துமாறு பாகிஸ்தானுக்கான இலங்கை தூதரகம் அவர்களுடைய உறவினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதேவேளை, குறிப்பிட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சொந்த நாடுகளுக்குத் திரும்புவோர் மீண்டும் சவுதிக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவர் என்று தூதுவர் அஸிம் தாஸிம் தெரிவித்திருந்தார்.

கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இம்மாதம் 25ம் திகதி வரையில் பொது மன்னிப்புக்காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435