நாடு திறக்கப்படுவதானது, நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறந்த நடவடிக்கையாக இருந்தாலும், கொரோனா தொடர்பில் எடுக்கப்படும் ஒரு முறையற்ற நடவடிக்கையாகும் என வைத்திய ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
இதனால் கொரோனா தொடர்பில் மோசமான நிலைமை ஏற்படக்கூடும் என்பதால் அந்த மோசமான நிலைமையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்க வேண்டும்.
வைரஸ் தொற்று சமூகத்தொற்று நிலையை அடையவில்லை என்று தொற்றுநோய் விஞ்ஞான பிரிவினால் இதுவரையில் உறுதிப்படுத்தப்படாத காரணத்தினால் அது தற்போது சமூகத்தொற்றாகியுள்ளது என்பது எங்களுடைய நிலைப்பாடாக இருக்கின்றது.
எனவே, இதற்கு நாங்கள் தயாராக வேண்டும். மூன்றாம் அலை ஏற்படுமாயின், அதற்கு முன்னால் இரண்டாம் அலை முடிவடைய வேண்டும் ஆனால் அவ்வாறு அது நிறைவு பெறவில்லை எனவே அனைத்து பகுதிகளிலும் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிலையாகும்.
அரசாங்கம் தம்மால் இயன்ற சிறந்த மாற்று வழியை ஏற்படுத்தும் போது, பொதுமக்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும். எனவே, இதற்கான இரசாயன பகுப்பாய்வு சேவைகளை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டுமென ரசா அரச இரசாயன பகுப்பாய்வு நிபுணர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே யோசனை முன்வைத்திருந்தோம். எனினும் அந்த யோசனை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது என்பதை எம்மால் இதுவரையில் காணமுடியவில்லை. குறைந்தது எங்களை எந்த ஒரு பேச்சுவார்த்தைக்குக்கூட அழைக்கவில்லை.
அந்த யோசனைகளுக்கமைய,
1. பிசிஆர் கொள்ளளவு தொடர்பில் பிரச்சினை ஏற்படக்கூடும் என்று நாங்கள் கூறினோம். அதனால் மாவட்ட மட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைத்தோம். மேலும் சில மாவட்டங்களில் பி.சி.ஆர் மேற்கொள்வதற்கான முறையான திட்டங்கள் இல்லை
2. இதற்கு மேலதிகமாக சம்பிரதாய முறைப்படியான பிசிஆர் முறைமைக்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்திற்கு அமைய மிகவும் வேகமான முறையில் பிசிஆர் மேற்கொள்வதற்கான புதிய இயந்திரங்களை கொள்வனவு செய்யுமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அந்த யோசனை புறந்தள்ளப்பட்டு, உலக வங்கியின் நிதியை கூட திருப்பி அனுப்பிய அதிகாரிகள் தற்போதைய நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டும்
3. துறைகளில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் முறைமை தொடர்பில் நாங்கள் யோசனை முன்வைத்தோம். ஆய்வுகூட தகவல்களை முகாமைத்துவம் செய்யும் கட்டமைப்பு ஒன்றை பயன்படுத்தும் முறை மற்றும் ஆய்வுகூடத்தை துறைசார் தரப்பினரிடம் எடுத்து செல்வதற்காக உடனடியாக பரிசோதனை இயந்திரங்களுடன் நடமாடும் ஆய்வுக் கூடங்களை நிறுவுவதற்கும், இதற்காக தன்னார்வ அடிப்படையில் எமது 100 அதிகாரிகள் தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் நாங்கள் குறிப்பிட்டோம்.
ஏப்ரல் மாதத்தில் முன்மொழியப்பட்டபடி, இன்று எங்கள் திட்டம்,
1. ஆதார மருத்துவமனைகள் வரை, அங்குள்ள ஆய்வகங்களில் கிடைக்கும் நோய் எதிர்ப்பு வேதியியல் முறைகளை சோதிக்கக்கூடிய இயந்திரங்களைப் பயன்படுத்தி கொரோனா எதிருடல் சோதனைகளைச் செய்ய நோய் எதிர்ப்பு வேதியியல் கருவிகளை இறக்குமதி செய்தல்.
2 குறைந்தது 10 நடமாடும் ஆய்வகங்களைத் ஏற்படுத்தி அவற்றின் மூலம் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளல்.
3. நவீன தொழில்நுட்பத்துடன் குறைந்தது 3 வேகமான பி.சி.ஆர் இயந்திரங்களை பெற்றுக்கொடுத்தல்.
4. ஆய்வக வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த வழிமுறையை உருவாக்குங்கள்
5. ஆய்வக சேவையை செயற்திறனுடன் வைத்திருக்க ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களுடன் வழக்கமான கலந்துரையாடல்.
இவை நடந்தால், ஒரு ஆய்வக சேவையாக நாங்கள் மூன்றாவது அலை அல்லது எந்த சமூக விரிவாக்கத்திற்கும் தயாராக இருக்கிறோம். பி.சி.ஆர் செய்ய முடியாது என்று இதுவரை நாங்கள் கூறவில்லை. இயந்திரங்களின் அதிகபட்ச செயல்திறனுடன் பி.சி.ஆரைச் செய்துள்ளோம்.
மருத்துவ ஆய்வக அறிவியல் வல்லுநர்கள் மற்றும் அவர்களின் நிபுணத்துவ நிறுவனங்களின் பங்களிப்புடன் தொழில்நுட்பக் குழு மூலம் ஆய்வக சேவையில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பது பொருத்தமானது என்று நாங்கள் சுகாதார அமைச்சிற்கு பரிந்துரைக்கிறோம்.
ஆய்வக சேவைத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பிற நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற நாங்கள் முன்மொழிகிறோம்.
எந்தவொரு தடைகளுக்கும் மத்தியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆய்வக சேவைகளின் துணை இயக்குநர் நாயகத்தின் தலைமையில் இந்த பணியை முடிக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் பல்வேறு அதிகாரிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாக ஆய்வக சேவையில் வீழ்ச்சி ஏற்படும். இருப்பினும் கொரோனா எந்த நேரத்திலும் சுகாதார அமைப்பு செயலிழக்கச் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.