நாட்டில் 198 கொரோனா தொற்றாளர்கள்: மாவட்ட ரீதியிலான விபரம்

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

54 பேர் தொடரிலிருந்து குணமடைந்துள்ளனர்.

7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் 137 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டின் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பில் 45 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில், 34 பேரும், களுத்துறையில் 27 பேரும், கம்பஹாவில் 16 பேரும், யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் தலா 7 பேரும், இரத்தினபுரியில் 5 பேரும், குருநாகலில் 3 பேரும், மாத்தறையில் இரண்டு பேரும், மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை மற்றும் காலி மாவட்டங்களில் தலா ஒவ்வொருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் மையங்களில் 37 பேரும், வெளிநாட்டவர்கள் மூவரும் இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435