நாட்டில் நிலவும் தற்போதைய சுகாதார அவசரநிலையை கருத்திற்கொண்டு தமது சொந்த வாகனங்களை பயன்படுத்தி அத்தியவசிய சேவையான தபால் சேவையை முன்னெடுத்துள்ளமையினால் போக்குவரத்துக்கான விசேட கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை தபால் சேவை சங்கம் தபால் மா அதிபரிடம் கோரியுள்ளது.
கொவிட் 19 தொற்று காரணமாக நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குசட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பொதுப்போக்குவரத்து சேவை நடைபெறாதமையைக் கருத்திற்கொண்டு தத்தமது சொந்த வாகனங்களையும் பணத்தையும் பயன்படுத்தியே தபால் சேவை ஊழியர்கள் அத்தியவசிய சேவையை முன்னெடுத்ததாக இலங்கை தபால்சேவை சங்கம் தபால்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தபால்சேவை சங்கத்தின் பிரதான தலைவர் ஜகத் மஹிந்தவின் கையெழுத்துடன் , நேற்றைய திகதியில் (18) தபால்மா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் சூழ்நிலையை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து கொடுப்பனவை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.