ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட நாற்பதாயிரம் அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படாதுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் ஆசிரியர் அதிபர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக 475 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை தேவை என கணக்கிடப்பட்டிருந்தது. எனினும் இதுவரை 310 மில்லியன் ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இத்தொகையினூடாக 60,000 ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது என அச்சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மிகுதியுள்ள சுமார் 40,000 அதிபர் ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்குவதற்காக சுமார் 165 மில்லியன் ரூபா நிதி தேவையாக உள்ளது. அத்தொகையை மிக விரைவில் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமாக கோரியுள்ளோம் என்றும் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.