நாளைமறுநாள் ஆர்ப்பாட்டம் வெடிக்கும்- திகாம்பரம்

அரசாங்கம் அறித்துள்ள 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளருக்கு வழங்குவது தொடர்பாக நாளை (24) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிடின் 25 ஆம் திகதி கொழும்பு, கோட்டை, புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்டு உறவினர் வீடுகளிலும் பாடசாலைகளிலும் தங்கியுள்ள அட்டன் மேபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 16 குடும்பங்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தனியார் துறை ஊழியர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழ ங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தும் கம்பனிகள் இதுவரையில் வழங்காமல் உள்ளன.

தோட்டத் தொழிலாளருக்கு சாதகமான தீர்வு வராத பட்சத்தில் 25 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையி­ரத நிலையத்துக்கு முன்னாள் அமர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் அமைச்சர்களான நானும் இராதாகிருஸ்ணனும் போராடத் தயாராக இருகின்றோம். இம்முறை தொழிலாளர்களை போராட்டத்தில் இறக்காமல் தொழிற்சங்கத் தலைவர்களான நாங்கள் போராட்டத்தில் குதிக்க உள்ளோம்

அதே போல், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் தலைமையில் அட்டன், தலவாக்கொல்லை, நுவரெலியா பதுளை முதலான மலையகத்தின் பல பகுதிகளிலும் வீதியில் அமர்ந்து போராட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435