நாளை பணிக்கு செல்லவுள்ளவர்களுக்கான அறிவுறுத்தல்கள்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ள நாளைய தினத்தில் அரச துறை ஊழியர்கள் காலை 8.30க்கு முன்னர் தமது பணியிடத்திற்கு சமூகமளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச துறையில் பணியில் ஈடுபடுவதற்காக தங்களது சொந்த வாகனங்கள் அல்லது அலுவலக வாகனங்களில் பயணிப்பவர்கள் காலை 8.30க்கு முன்னதாக தமது பணியிடத்திற்கு சமூகமளிப்பது மிகவும் சிறந்ததாகும்.

இதேநேரம், தனியார்துறை வாகனங்கள் காலை 8 மணிமுதல் முற்பகல் 10 மணிவரையான காலப்பகுதியில் பயணிக்க முடியும்.

இதேநேரம், மாலை வேளைகளில், அரசதுறை வாகனங்கள் 3 மணிமுதல் 4 மணிக்கு இடையிலான காலப்பகுதிக்குள் தங்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறவேண்டும்.

அத்துடன், தனியார்துறை வாகனங்கள் மாலை 4 மணிமுதல் 5 மணிவரையான காலப்பகுதிக்குள் தங்களது பணியிடங்களில் இருந்து வெளியேறுவது மிகவும் சிறந்ததாகும் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள், கைத்தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு இந்த விதிமுறைகள் ஏற்புடையாகாது.

வழமையான அலுவலக பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கே குறித்த நேர விதிமுறை ஏற்புடையதாகும்.

இதேநேரம், பொதுப் போக்குவரத்தின் மூலம், பணியிடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை ஏற்புடையதாகாது என்றும், அவர்கள் தங்களது அலுவலகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு பணிக்கு செல்லும் வகையில் பொது போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம் : சூரியன் எப் எம் செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435