பெருந்தோட்டத்துறையில் நவீன பொறிமுறைகள் அமுலாக்கப்பட வேண்டியது அவசியம் என்று சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதார எதிர்காலம் என்ற பெயரில் வெளியிட்டுள்ள சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறையில் தற்போது தொழிலாளர் பாற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு ஒரு பிரதான காரணமாகும். இந்தநிலையில் பெருந்தோட்டத்துறையின் தேயிலைக் கொழுந்து பறித்தல் மற்றும் உற்பத்தித்துறைகளில் புதிய நவீனப்படுத்தல்கள் அமுலாக்கப்படுவதன் ஊடாக தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்தநடவடிக்கை தொழிலாளர்களின் இருப்பை பாதிக்காது என்றும் சர்வதேச தொழிலாளர் ஒழுங்கமைப்பு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.