நியாயமான சம்பள உயர்வின்றேல் தொழிற்சங்க போராட்டம்

பெருந்தோட்டத்துறை மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுகொடுக்க முதலாளிமார் சம்மேளம் முன்வராதபட்சத்தில் தொழிற்சங்க போராட்டம் நடத்தப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

எட்டாவது தடவையாக நடத்தப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்ததையடுத்தே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார்.

முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள 500 ரூபா சம்பள உயர்வை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், குறித்த சம்பள உயர்வு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவது அவசியம் என்றும் தெரிவித்தார்.

புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பான எட்டாவது பேச்சுவார்தை கடந்த 26ஆம் திகதி நடைபெற்றது. தொழிற்சங்கப்பிரதிநிதிகளின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன முதலாளிமார் சம்மேளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. இதன் போது கருத்து தெரிவித்த முதலாளிமார் சம்மேளனம், 450 ரூபாவாகவுள்ள தொழிலாளரின் நாளொன்றுக்கான அடிப்படை சம்பளத்தை 500 ரூபாவாகவும் 11 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் ஒவ்வொரு கிலோவுக்கு ஒருதொகையை வழங்கவும் ஆலோசனையை முன்வைத்தது. இதனை  தொழிற்சங்கங்கள் முற்றாக நிராகரித்ததையடுத்து பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்தன.

கடந்த 2013 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

தற்போது தோட்டத் தொழிலாளருக்கு நாளொன்றுக்கான அடிப்படை சம்பளம் 450 ரூபா உட்பட ஏனைய கொடுப்பனவுகளுடன் 650 ரூபா வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435