நியுஸிலாந்தில் வேலைவாய்ப்பு; மோசடி செய்த பெண் கைது

நியுஸிலாந்தில் தொழில் பெற்றுத்தருவதாக நிதி மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாணந்துறை சட்ட வலுவூட்டல் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹொரணை, மீமன, பிரேமதிலக்க மாவத்தை பிரதேசத்தில் வைத்து இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பெற்றுக்கொண்ட 2 95,000 ரூபா பணமும் 40 கடவுச்சீட்டுக்களும் குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹொரணை, பொக்குணுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இன்று (07) ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிறுத்தப்படவுள்ளதுடன் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435