நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரத போராட்டம்

நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் மாகாண கல்வி அமைச்சின் முன்பாக உண்ணாவிரத போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சைக்கான திகதி அறிவிக்கும் வரையில் இவ்வுண்ணாவிரத போராட்டம் சுழற்சி முறையில் தொடரும் என்றும் இவ்வுண்ணாவிரத போராட்டத்திற்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப் போவதாகவும் அச்சம்மேளனம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில் தாம் சேவையாற்றியதாகவும் ஆனால் அதனை கவனத்தில் கொள்ள மாகாணான கல்வி அமைச்சு தவறியுள்ளதாகவும் இச்சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

திருகோணமலையைச் ​சேர்ந்த 250 தொண்ட்டர் ஆசிரியர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த 100 ஆசிரியர்களும் அம்பாறையைச் சேர்ந்த 115 தொண்டர் ஆசிரியர்களும் இச்சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்/ நன்றி- தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435