வாடிக்கையாளர்களை கவர விசேட பயிற்சி வழங்கவுள்ள ஹோட்டல் சங்கிலித் தொடர்

கொவிட் 19 பிரச்சினைக்கு பிறகு நாட்டை நோக்கி வரும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு வித்தியாசமாக இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால் அதற்கேற்ற வகையில் ஊழியர்களை பயிற்றுவிக்க எதிர்பார்த்துள்ளதாக முன்னணி ஹோட்டல் துறை சங்கிலித் தொடரான ஜெட்விங் சிம்பொனி பி.எல்.சி அறிவித்துள்ளது.

ஜெட்விங் சிம்பொனி பி.எல்.சி தனது ஊழியர்களை வரவேற்பதற்குத் தேவையான திறன்களையும், ஜெட்விங் ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது கோவிட் -19 க்குப் பிந்தைய பயணிகளை எவ்வாறு கையாள்வது என்பதையும் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.

” எதிர்காலத்தில் தம்மிடம் சேவைநாடி வரும் உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் நடத்தைக்கேட்ப கையாள எமது ஜெட்விங் ஹோட்டல்களில் ஊழியர்கள் எஉதவும் வகையில் பயிற்சித் திட்டங்களைத் நாங்கள் தயாராகி வருகிறோம்” என்று ஜெட்விங் சிம்பொனி தலைவர் ஹிரான் கூரே தெரிவித்தார்.

கொவிட் 19 இற்கு பிந்தைய காலப்பகுதியில் தமது வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு ஹோட்டல் சங்கிலித் தொடர்கள் தமது வாடிக்கையாளர்களை கவர தமது ஊழியர்களுக்கு இதேபோல் பயிற்சிகள் வழங்க தீர்மானித்திருக்கக் கூடும். எனினும் ஜெட்விங் நிறுவனமே இலங்கையில் இதனை முதன்முதலில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435