நீண்டகால அடிப்படையில் அதிகரிக்கும் சம்பள முன்மொழிவு

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் தொழிலாளர்கள் தொடர்பான சம்பள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்டால் தொழிலாளர்களின் வேதனமானது கணிசமான அளவில் நீண்ட கால அடிப்படையில் அதிகரிக்கும் என பெருந்தோட்ட சங்கத் தலைவர் ரொஸான் இராஜதுரை நம்பிக்கை வெளிட்டுள்ளார்.

தொழிலாளர்களின் வேதன பொறிமுறைக்கு அப்பால் செல்கின்ற இலங்கை பெருந்தோட்டத்துறையின் செயற்பாட்டுமுறையின் தொலைநோக்கான முன்மொழிவுகள் பெருந்தோட்டத் துறையின் நீடித்த வாழ்வு, வளர்ச்சி மற்றும் நிலையான தன்மை என்பனவற்றிற்கு மிகவும் அத்தியாவசியமானது என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இலங்கை பெருந்தோட்ட சங்கத் தலைவர், தொழிலாளர் தற்போது ஈட்டும் நாள் கூலி முறையியலானது முயற்சியாளர்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதன் முடிவில் தற்போது காணப்படுகின்ற பாரம்பரிய வரவு அடிப்படையிலான தொழிலாளர் ஊதிய வழங்கள் முறையானது பரஸ்பர உற்பத்தித் திறன் அடிப்படையான வேதன வழங்கல் முறை அல்லது வருமான பங்கீட்டு முறைமையின் மூலம் தொழிலாளர்கள் தங்களுடைய வருமானத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இராஜதுரையின் ஆய்விற்கிற்கு அமைய பெருந்தோட்ட துறையின் இன்றியமையாத பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து பின்வரும் தலைப்புக்களை மேற்கோள் காட்டியுள்ளார். அவற்றில், இலங்கை தேயிலை பண்டக்குறி தொடர்பாக பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அதன் நீடித்த வாழ்வு தொடர்பாக ஆற்றும் கடினமான வகிபாகம் மற்றும் சவாலான நிலைமை, காலங்கடந்த வேதன முறையில் காணப்படும் பிரச்சினைகள், இலங்கையின் பெருந்தோட்டத் துறையின் எதிர்கால இருப்பினை கருத்திற்கொண்டு பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளால் பரஸ்பர நன்மை பயக்கும் வேதனமுறையுடன் தற்போது காணப்படும் வேதன முறையினை பிரதியீடு செய்து வழங்கப்பட்ட ஆலோசனைகள் போன்ற தலைப்புக்களை அவர் உள்ளடக்கியுள்ளார்.

வேலைத்தளம்/ நன்றி- வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435