மேலும் பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு

நாட்டில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை ஆரம்பிக்கப்பட்டுள்ள மையை அடுத்து இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா, மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய கம்பஹா, கிரிந்திவெவல, தொம்பே, பூகொட, கனேமுல்ல, வீரகல. வெலிவேரிய, மல்லவத்துகிரிபிட்டிய, நிட்டம்புவ, மீரிகம, பல்லேவெல, யக்கல, யாஎல மற்றும் கந்தானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

மினுவாங்கொட தொழிற்சாலையில் பெருமளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு வலையத்திற்கு உட்பட்ட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டத்திற்கு அமைய அனைவரும் வீடுகளிலேயே தங்கியிக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435