சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்;று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
தொடருந்து நிலைய அதிபர்கள், கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்கமைப்பாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் இயந்திர சாரதிகள் ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது வேதன பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுத்தரும் வரையில், இந்தப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்து.