பகடிவதை குறித்து ஒன்லைனில் முறைபாடு

“பகடிவதை“ என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடூரங்களை முறையிடுவதற்கு, “கணினித் தொகுப்பு முறைப்பாடுப் பொறிமுறை” என்ற ஒன்றை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவியுள்ளது.

“முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பில் விசாரிக்கப்படும். முறையிட்ட பின்னர் அதனை மீளப் பெற முடியாது. பொய் முறைப்பாடுகள் செய்தால் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ugc.ac.lk/rag/ எனும் இணையத்தளத்தினுடாக பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் இந்த முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. சகலவிதமான பகடிவதைகள் குறித்தும் மேற்​குறிப்பிட்ட இணையத்தளத்தில் முறையிட முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் கல்வியை தொடர ஆதரவும் வழங்கப்படவுள்ளது.

மேலும், 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய 0112-123700, 0112-123456 என்ற தொலைபேசி இலக்கங்களையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435