பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க மாகாணங்களுக்கு அனுமதி

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதற்கு 13ம் திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் எம்பி டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கிழக்கில் போராடி வரும் பட்டதாரிகளின் பிரச்சினைக்கு மாகாணசபைகளினூடாகவே தீர்வு வழங்கப்படவேண்டும். நுண்கலைத்துறையில் ஆசிரியர் வெற்றிடங்கள் இல்லை. கல்வியியற் கல்லூரிகளின் நுண்கலைத்துறை டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக இணைக்கப்படுகின்றனர். பட்டதாரிகள் பிரச்சினைக்கு அந்தந்த மாகாணங்கள் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

மேலும் மேற்கூறிய விடயம் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாணத்துக்கும் அறிவுறுத்தல் வழங்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435