பட்டதாரி பயிலுநர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகள் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி ஆரம்பமாகும் என்று அரச நிருவாக அமைச்சு அறிவித்துள்ளது.
கடிதம் கிடைத்த பட்டதாரிகள் பயிற்சியில் இணைவதற்கு மே மாதம் 4ம்திகதி அல்லது 11ம் திகதி வருகைத்தரலாம் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுநர்களுக்கான பயிற்சிகளை தேர்தல் நிறைவுறும் வரை இடைநிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.