பட்டதாரிகளுக்கு அதிர்ச்சியான செய்தி: தேர்தல் முடியும்வரை நியமனங்கள் இரத்து?

அரசாங்க வேலைவாய்ப்புக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு வழங்கப்படவிருந்த இரண்டு மாதகால தலைமைத்துவப் பயிற்சிகளை தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுநிர்வாக அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த மாதத்தின் இறுதி தினங்களிலும், இந்தமாத ஆரம்ப சில தினங்களிலும் தபால்மூலமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும் இதே போன்ற அரச நியமனங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், இவை தேர்தல் இலாபத்தை அடிப்படையாக கொண்டு முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் என்ற அடிப்படையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலே வழங்கப்படுகின்ற நியமனங்கள் தேர்தல் இலாப நோக்குடன் வழங்கப்படுவதாகவே கருதப்படுகின்றது.

அதேவேளை, கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்படும் வகையில் ஈ தபால் மூலமாக வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவ்வாறான நியமனங்ககள் அரச சேவையின் தேவை கருதியோ, பற்றாக்குறை காரணமாகவோ வழங்கப்படுவதில்லை. அரசியல் இலாபத்தை கருத்திற்கொண்டே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதனால் எதிர்வரும் பொதுத் தேர்தல் முடிவடையும் வரையில் இது போன்ற பயிற்சிகளை வழங்குவததை தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரையில் கைவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435