பட்டதாரிகள் நியமனம்- பிரச்சினைக்கு உடனடி தீர்வு அவசியம்

தென்மாகாண ஆசிரியர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல் தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணுமாறு தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 17ம் திகதி குறித்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தும் ஊடகவிலாளர் சந்திப்பிலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் மகேஷ் விமுக்தி, தென்மாகாண தொழிலற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் மெதகொட விஜித்த தேரர் மற்றும் தேசிய உயர் ஆங்கில டிப்ளோமாதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹசினி பபசரா ஆகியோர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பின் போது ஏற்படும் பிரச்சினைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ளாமை HNDE டிப்ளோமாதாரிகளை தென்மாகாணத்தில் மட்டும் சேவையில் இணைத்துக்கொள்ளாமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் இவ்வூடகவியலாளர் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகளை விரைவில் தீர்த்து பட்டதாரிகளுக்கு விரைவில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்குமாறும் தென்மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைக்கும் போது தென்மாகாண கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்ர உட்பட அரசியல் தலையீட்டை உடனடியாக நிறுத்துமாறும் இதன்போது கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435