பட்டதாரிகள் பாதிக்கப்பட்டமைக்கு ஆளுநர் பதிலளிக்கவேண்டும்

கிழக்கு பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு மாகாண ஆளுநர் பதில் சொல்ல வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஹாபீர் நஸீர் அஹமட் கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் முதலமைச்சரை தொடர்புகொண்டு தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவித்ததையடுத்து கருத்து தெரிவித்தபோதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 1,119 கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமங்கள் வழங்கப்பட்டன. ஆனால் உண்மையில் 1441 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

சுமார் நூறு நாட்கள் மழை வெயில் பாராமல் எமது பிள்ளைகள் போராட்டம் நடத்தியதனால் ஜனாதிபதி, பிரதமரிடம் கலந்துரையாடி நியமனங்கள் வழங்குவதற்கான அனுமதி பெறப்பட்டது. மீண்டும் அவர்கள் வீதியில் இறங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடாது. நியமனம் பெறவேண்டிய 322 பேர் நியமனம் கிடைக்காமல் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பர். இது நியாயமில்லை. அத்துடன் 40 புள்ளிகளுக்கு மேல் எடுத்த அனைவருக்கும் நியமனம் வழங்குவது கட்டாயம். அவர்கள் அவர்களுடைய தகுதியை நிரூபித்துள்ளனர். மாகாணசபை இருந்திருந்தால் அது தொடர்பில் தீர்மானங்கள் எடுத்து செயற்படுத்தியருப்போம்.

தற்போது எம்பிள்ளைகளுக்காக நாடாளுன்றத்தினூடாகவே குரல் எழுப்ப வேண்டும். இதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்திற்கொள்ளவேண்டும். ஏற்கனவே மாகாணத்தில் உள்ள வெற்றிடங்கள் தொடர்பான தரவுகள் ஏற்கனவே தேசிய முகாமைத்துவ திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவற்றை நிரப்புவதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதனால் 40 புள்ளிகளுக்கு மேல் எடுத்த பட்டதாரிகளுக்கான நியமனங்களை பெற்றுக்கொடுப்பது ஆளுநருக்கு பெரிய விடயமில்லை. ஜனாதிபதியுடன் உரையாடி பட்டதாரிகளுக்கான நியமனங்களை பெற்றுக்கொடுக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435