பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு காண உயர் மட்ட பேச்சுவார்த்தை இன்று!

கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தை  இன்று (14)   கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்  மேற்கொள்ளப்படும் இப்பேச்சுவார்த்தையில்,  கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள் வாங்குவது தொடர்பாக ஆராய்யப்படவுள்ளது.

இந்த கூட்டத்திற்கு மாகாண ஆளுநர் , முதலமைச்சர் , கல்வி அமைச்சர் , முதன்மை செயலாளர் உட்பட கலவித்துறைசார் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மத்திய மற்றும் மாகாண அரசுகளிடம், தங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கக் கோரி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் நேற்றுடன் (13)  மூன்றாவது வாரமாக தொடர்கிறது.

தங்களின் போராட்டம் மூன்றாவது வாரமாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் இன்று திங்கட்கிழமைநேற்று  மட்டக்களப்பு நகரில் வேலையற்ற பட்டதாரிகளின் கவன ஈர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது.

இந்தப் போராட்டம் தொடர்பாக அதிகாரத்திலுள்ளவர்களிடமிருந்து இதுவரையில் சாதகமான பதில்கள் கிடைக்காத நிலையில், இந்த போராட்டம் தொடர்வதாக பட்டதாரிகள் கவலையும், விசனமும் தெரிவித்துள்ளனனர்.

இலங்கையில் 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பின்னர் பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் கனாரணமாக சுமார் 30 ஆயிரம் பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாகவும்  கிழக்கு மாகாணத்தில் மட்டும் சுமார் 5000 பட்டதாரிகள் 4 வருடங்களுக்கும் மேலாக வேலை வாய்ப்பு இன்றி இருப்பதாக வேலையில்லாப்பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய மற்றும் மாகாண அரசு துறைகளில் போட்டிப் பரீட்சை இன்றி தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரதான கோரிக்கையாக இந்த சத்தியாகிரக போராட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புக்கான வயது எல்லை 36 ஆகும். வயது எல்லை 45 என அதிகரிக்கப்பட வேண்டும், ஏற்கனவே, அரசு துறைகளில் தொழில் புரிபவர்கள் பட்டதாரிகளுக்கான தொழில் வாய்ப்புகளின் போது உள் வாங்கப்படக் கூடாது, பட்டதாரி சான்றிதழ் பெற்ற திகதியை கருத்தில் கொண்டு மூப்பு அடிப்படையில் தொழில் வாய்ப்பு கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் .ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளினால் மட்டக்களப்பு , காரைதீவு மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதனிடையே கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாகாண அரசு துறையிலுள்ள வெற்றிடங்கள் மூலம் தொழில் வழங்க தயாராகவிருப்பதாக கிழக்கு மாகாண சபை கூறுயுள்ளதுடன்,  இதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீ அகமட் தெரிவிக்கின்றார்.

நன்றி- பிபிஸி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435