மேல் மாகாண பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி மேலதிக செயலாளர் விமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய, பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளை பெற்ற 547 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இரு குழுவாக பிரிக்கப்பட்டு 205 பேருக்கான பயிற்சிகள் இம்மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெற்றது. இரண்டாம் குழுவுக்கான பயிற்சிகள் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகியுள்ளது.
பயிற்சிகளை முதலில் பூர்த்தி செய்தவர்களுக்கான மேல் மாகாண பாடசாலைகளில் சேவைக்காக இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.