பட்டதாரி ஆசிரியர் நியமனம் எதிர்வரும் 5ம் திகதி

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜூலை மாதம் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மலையக பாடசாலைகளில் நிலவுகிற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 3100 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய நியமனங்கள் அடுத்த வருடம் வழங்கப்படும். இவ்விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தப்பட்டது.

பெருந்தோட்டத்துறை பாடசாலைகளில் 3143 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்றன. அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இது நிமித்தமே பிரதமரின் ஆலோசகரிடம் கலந்துரையாடினோம் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435