பட்டதாரி பயிலுநர் நியமனம் பெற்றோர் கவனத்திற்கு

நியமனக்கடிதம் பெற்று 7 நாட்களுக்குள் பயிற்சியில் இணைந்து கொள்ளாத பட்டதாரிகளின் நியமனங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

வேலையில்லா பட்டதாரிகள் ஐம்பதாயிரம் பேருக்கு வழங்கப்பட்ட நியமனங்களே உரிய தினத்தில் பயிற்சியில் இணையாவிடின் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கமைய, வேலையற்ற பட்டதாரிகளுக்க பட்டதாரி பயிலுனருக்கான நியமனக்கடிதங்கள் தற்போது தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடிதம் கிடைத்து மூன்று நாட்களுக்குள் உரிய பிரதேச செயலகங்களில் தாம் நியமனத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கவேண்டும்.

அத்துடன் ஆளடையாள அட்டை, பிறப்பத்தாட்சிப் பத்திரம், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம சேவகரின் அத்தாட்சி, பட்ட சான்றிதழ் அல்லது உரிய பல்கலைக்கழகத்தினால் பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சிக் கடிதம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது கல்வியமைச்சின் கடிதம் மற்றும் பெயரில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுமாயின் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பித்தல் அவசியம்.

அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்து செய்யப்படும் எனவும், அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் எக்காரணத்தைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய முறையில் பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, தொழிலுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435