பணிநீக்கம், சம்பள குறைப்புக்கு எதிராக போராட்டம்

தனியார்துறையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நீக்கம் செய்தல் மற்றும் ஊதியத்தை குறைத்தல் என்பவற்றுக்கு எதிராக குளியாப்பிட்டிய நகரி்ல் நேற்று (11) அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் போராட்ட மத்தியநிலையத்தின் ஏற்பாட்டில் இவ்வமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தனியார்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலரை அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளதுடன் சம்பளக்குறைப்பையும் மேற்கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் மாதாந்த லீசிங் கட்டணத்திற்கு ஆறு மாத கால தாழ்த்தி செலுத்தலாம் என அரசாங்கம் சலுகை வழங்கியுள்ளபோதிலும் பல நிறுவனங்கள் பலவந்தமாக லீசிங் தொகையை அறிவிட்டு வருகின்றமையினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்ககொடுத்து வருகின்றனர் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கான நடவடிக்கையையும் அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435