பணிப்பெண்களின் வீசா காலம் மற்றும் கடவுச்சீட்டுக்களை தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து பார்க்குமாறு குவைத் உள்விவகார அமைச்சின் தொடர்பாடல் மற்றும் பாதுகாப்புத் தகவல் திணைக்களம் நேற்று (19) அறிக்கை வெளியிட்டுள்ளது.
வீடுகளில் பல்வேறு சட்ட மீறல்கள் நடப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளமையினால் தேவையற்ற சட்ட பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளவே இவ்வாறு ஆராய்ந்து பார்க்குமாறு அத்திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ச்சியாக கடவுச்சீட்டு மற்றும் வீசா தொடர்பில் ஆராய்ந்து பார்க்க தொழில்வழங்குநர் தவறுவதும் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு அடிக்கடி செல்வதும் இதற்கு பிரதான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.